இந்தியா
Typography

எடப்பாடி பழனிசாமி அரசு, கருத்துச் சுதந்திரந்தைப் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்களின் கோபத்தை சம்பாதிக்கின்றது என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இரட்டை இலை சின்னத்தை மீட்க எங்களது அணி போராடி வருகின்றது. ஓ.பன்னீர்செல்ம் அணி தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில் போலி கையெழுத்துக்களை போட்டிருக்கிறார்கள். எனவே அந்த அணியினரின் தில்லுமுல்லு குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி கலைய வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது. மத்திய அரசின் கையிலே அமலாக்கத் துறை, CBI, வருமான வரித்துறை இருப்பதால் மத்தியில் ஆளும் கட்சியினுடைய தமிழக தலைவர்களுக்கே இங்குள்ள ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர். மக்கள் எப்படி போனால் என்ன பதவி சுகம் ஒன்றே பெரிது என்ற எண்ணத்தில் தான் தற்போதைய தமிழக அரசு இயங்கி கொண்டிருக்கின்றது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்