இந்தியா
Typography

பத்திரிகையொன்றின் பவளவிழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று திங்கட்கிழமை சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, தி.மு.க. தலைவர் நரேந்திர மோடியை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். 

கோபாலபுரத்திலுள்ள மு.கருணாநிதி இல்லத்திலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிவிலால் புரோகித்தும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.

கோபாலபுரம் வந்த பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்து மு.க.ஸ்டாலின் வரவேற்றார். துரைமுருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் மோடியை வரவேற்றனர். பின்னர் திமுக தலைவர் கருணாநிதியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அவரது உடல்நலம் குறித்து பிரதமர் மோடி சுமார் 15 நிமிடம் பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியும், திமுக தலைவர் கருணாநிதியும் முதல்முறையாக சந்தித்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்