இந்தியா
Typography

“எனக்கு அரசியல் அரிச்சுவடி கற்றுக் கொடுத்தவர் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி” என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். 

மு.கருணாநிதி உடனான தனது சந்திப்புக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமக்கு அரசியல் அரிச்சுவடி கற்றுக் கொடுத்தவர் கருணாநிதி எனவும், எனவே அவரது உடல் நிலை குறித்து விசாரிப்பதற்காக, சந்தித்ததாகவும் கூறியுள்ளார்.

அரசியலில் இருக்கும் அனைவரும் அரசியல் நாகரிகத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அரசியலில் கொள்கை அடிப்படையில் எதிரெதிராக இருப்பவர்கள், எதிரிகளாக சித்தரிக்கப்படுவதை மாற்றியமைக்க வேண்டும் எனவும் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்