இந்தியா
Typography

தலித்துகளை தாக்குவதற்கு முன்னர் என்னைத் தாக்குங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாகப் பேசியுள்ளார்.  

இதுவரை தலித்துக்கள் தாக்கப்பட்டால் எதுவும் வாய் பேசாமல் மவுனம் காத்து வந்த நரேந்திர மோடி, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் உத்திர பிரதேசத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றியபோது பசுவைப் பாதுகாப்போம் என்கிற பெயரில் தலித்துக்கள் தாக்கப்படுவது கண்டனத்துக்கு உரியது என்று மிக்க காட்டமாகப் பேசினார். மேலும், மாநில அரசுகள் தலித்துக்கள் தாக்கப்பட்டால் பசுப் பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.  

நேற்று ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடி, மீண்டும் ஆவேசத்துடன் பேசியுள்ளார்.அப்போது தலித்துக்களைத் தாக்குவதற்கு முன்னர் தம்மைத் தாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், இதற்கு பதில் 

அளித்துள்ள காங்கிரஸ் மோடி நீலிக் கண்ணீர் வடிக்கிறார் என்றும், குஜராத் தேர்தலை மனதில்கொண்டு அவர் இப்படி தலித்துக்களுக்கு ஆதரவானவர் போல நடிக்கிறார் என்றும் கூறியுள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்