இந்தியா
Typography

சரக்கு- சேவை வரி மசோதா இன்று மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.  

கடந்த  ஒரு ஆண்டுக்கு முன்பே நாடாளுமன்றத்தின் மக்களவையில் சரக்கு-சேவை வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. என்றாலும், மாநிலங்களவையில் அந்த மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என்றால், திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் மாநிலங்களவையில் இந்த மசோதாவை அப்போது தாக்கல் செய்ய முடியவில்லை. பின்னர் திருத்தங்களுடன் கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் சரக்கு-சேவை வரி மசோதா நிறைவேற்றப்பட்டது. 

திருத்தங்கள் செய்யப்பட்ட மசோதா என்பதால், இம்மசோதாவை மக்களவையில் இன்று மீண்டும் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது. அதிமுக தவிர தேசிய அளவில் அனைத்துக் கட்சிகளும், மாநில அளவில் அனைத்துக் கட்சிகளும் என்று இம்மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், மசோதா எளிதில் மக்களவையில் நிறைவேறிவிடும் என்பது குறிப்பிட்டது தக்கது.மசோதா நிறைவேறிய பின்னர் இதுக் குறித்து விளக்கம் அளித்து உரை நிகழ்த்த உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி என்று தகவல் வெளியாகி உள்ளது.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்