இந்தியா
Typography

உடற் பருமன், குடிப்பழக்கம் இவற்றால் அதிக இந்தியர்களுக்கு புற்று நோய் பாதிப்பு வருவதாக அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

அண்மைக் காலமாக இந்தியாவில் மதுப்பழக்கம் என்பது மக்களிடையே அதிகரித்து வருகிறது என்றும், அதோடு தவறான உணவுப் பழக்கங்களால் உடற் பருமன் ஏற்பட்டு, இவை இரண்டாலும் இந்திய மக்களுக்கு புற்று நோய் பாதிப்பு மிக அதிக அளவில் ஏற்படுகிறது என்றும் அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. 

மேலும், புகையிலைப் பொருட்கள் பயன்பாடும் அதிகம் உள்ள நிலையில், அதுவும் புற்றுநோய்க்கு மிக முக்கிய காரணியாக உள்ளது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.முதலில் இந்தியர்கள் முறையற்ற உணவுப் பழக்க வழக்கத்தை கைவிட வேண்டும் என்றும் அந்த ஆய்வு அறிவுறுத்துகிறது.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS