இந்தியா
Typography

நாடு முழுவதும் உள்ள பாலங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு நியமித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலையில் சாவித்ரி ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலம் சமீபத்தில் இடிந்து விழுந்ததில் 44 பேர் பலியாகினர். இதன் எதிரொலியாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆகியவை இணைந்து நாடு முழுவதும் உள்ள பாலங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. 

இந்த குழு நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் உள்ள பாலங்கள், சிறிய பாலங்கள், சுரங்கப் பாதைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து அதுபற்றிய விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. பாலம் கட்டிய மற்றும் புதுப்பித்த திகதி, பாதுகாப்பு நடவடிக்கைகள், அதன் தரம் ஆகியவை குறித்து இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. அக்குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் இதுபோன்ற பெரிய விபத்துகள் தவிர்க்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்