இந்தியா
Typography

டெல்லியில் ஒரு நாளில் சராசரி நான்கு என்கிற அளவில் பெண்களுக்கு எதிரான குற்றம் நடக்கிறது என்று, டெல்லி போலீசார் அறிக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.  

டெல்லியில் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை டெல்லி போலீசார் சமர்ப்பித்துள்ளனர். இதில் கடந்த 4 ஆண்டுகளில் 3 மடங்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவிட்டன, இதில் பாலியல் வன்கொடுமை, வரதட்சணை கொடுமை, குடும்பத்த தகராறு என்பன உள்ளிட்ட வகை குற்றங்கள் அடங்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2012ம் ஆண்டு 706 வழக்குகளும், 2013ம் ஆண்டு ஆயிரத்து 686 வழக்குகளும், 2014ம் ஆண்டு 2 ஆயிரத்து 166 வழக்குகளும், 2015ம் ஆண்டு 2 ஆயிரத்து 194 வழக்குகளும் என்று பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மொத்தத்தில் கடந்த 15 ஆண்டுகளில் 6 மடங்கு என்கிற அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளன என்றும், அப்படிப் பார்க்கையில் ஒரு நாளைக்கு 4 என்கிற அளவில் சராசரியாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன என்றும் டெல்லி போலீசார் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS