இந்தியா
Typography

32 தமிழர்கள் ஆந்திராவில்  கைதானது தொடர்பாக  தமிழக அரசு அமைச்சர்கள் குழுவை உடனடியாக ஆந்திராவிற்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக ஆம் ஆத்மி கட்சி தமிழக ஒருகினைப்பாளர் வசீகரன் கோரிக்கை வைத்துள்ளார்.  

அந்த கோரிக்கையில், 32 தமிழர்களை  செம்மரக்கட்டை கடந்த வந்தவர்கள் என்று சந்தித்து ஆந்திர அரசு கைது செய்து 15 நாட்களுக்கு அவர்களை சிறையில்  அடைப்பதாக  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது.இதற்கு முன்னர்  20 தமிழர்களை சுட்டுக்கொன்றுள்ளது ஆந்திர அரசு. இந்த 32 தமிழர்கள் ரயிலில் ரேணிகுண்டாவுக்கு சென்று கொண்டு இருந்த போது கைது செய்யபட்டதாக சொல்லபடுகிறது. 

கைது செய்யப்பட்ட 32 தமிழர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர அரசு இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை, செய்தி சேகரிக்க சென்ற தமிழக செய்தியாளர்களை கூட கைது செய்யபட்டவர்களை சந்திக்க கூட அனுமதிக்காதது மிகவும் கண்டிக்கதக்கது.இந்த செம்மரக்கட்டை பிரச்சனைக்கு நிரந்திர தீர்வு ஏற்படுத்தபடாமலேயே இந்த பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது, பிரச்சனைகள் வரும் போது மட்டுமே பேசப்படுகிறது  இதற்கு காரணம் தமிழக அரசு பொறுபற்ற நிலையில் இருப்பதையே இந்த 32 தமிழர்கள் கைது காட்டுகிறது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. 

மேலும் இந்த பிரச்சனைக்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக காலம் தாமதிக்காமல் உறுதியான ஒர் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தமிழக அமைச்சர்கள் கொண்ட குழ ஒன்றை ஏற்படுத்தி ஆந்திர முதலமைச்சரை சந்தித்து தமிழர்களுக்குரிய நியாயத்தை பெற்றுதருவததோடு இப்பிரச்சனைக்கு நிரந்திர தீர்வையும் ஏற்படுத்திட வேண்டும என்று ஆம்ஆத்மிகட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் கோரிக்கை வைத்துள்ளார்.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்