இந்தியா
Typography

மத்திய அரசின் கல்வி கொள்கையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டார்.  மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் இன்று காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடந்தது.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரும் தி.மு.க. பொருளாளருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்று மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து பேசினார். 

அவருடன் டி.ஆர்.பாலு, வி.பி.துரைசாமி, வாகை சந்திரசேகர், மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, மாதவரம் சுதர்சனம், ஆவடி நாசர், நிர்வாகிகள் கு.க.செல்வம், கென்னடி, கே.ஏழுமலை, ஜெ.கருணாநிதி, அகஸ்டின்பாபு, வி.எஸ்.ராஜ், பாலவாக்கம் விஷ்வநாதன், குணசேகரன், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, மதன்மோகன், துணை செயலாளர் சிதம்பரம், மா.பா.அன்புதுரை, காமராஜ் உள்ளிட்ட பகுதி செயலாளர்கள், மாணவர் அணியினர், இளைஞர் அணியினர். மகளிர் அணியினர், உள்ளாட்சி பிரதி நிதிகள் என ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். 

அப்போது பேசிய ஸ்டாலின், சட்டப்பேரவையில் இதுக் குறித்து தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்த போதிலும், தமிழக அரசு கண்டுக்கொள்ளவில்லை என்று கூறினார். எனவே, எதிர்க்கட்சிகள் இணைந்து இதுக் குறித்த தனித் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளோம் என்றும், எதிர்க்கட்சிக்கு அந்த உரிமை உள்ளது என்றும் கூறினார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS