இந்தியா
Typography

அரசு நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை விநியோகிக்க வேண்டும் என்று தென்னை மர விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.  

தேங்காய் விவசாயிகள் சங்கத்தினர் தமிழக அரசிடம் இரண்டு கோரிக்கை வைத்துள்ளனர். முதலாவதாக கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதை ரத்து செய்ய வேண்டும். இரண்டாவதாக இறக்குமதி உணவுப் பொருளுக்கு அரசு மானியம் தருவதை விடுத்து, தமிழகத்தில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய்க்கு மானியம் வழங்க வேண்டும். அதன்படி, அரசு நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்வதை கணிசமாகத் தடுக்க முடியும் என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்