இந்தியா
Typography

திமுக கூட்டணி ஆட்சிக்கு உடன்படவில்லை என்பதால் விஜயகாந்த் எங்களுடன் அதாவது மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார் என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.  

சட்டப்பேரவைத்த தேர்தல் நேரத்தில் திமுகவுடன், தேமுதிக இணைய வேண்டும் என்பதையே தேமுதிக தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் விரும்பினார்கள் என்று செய்திகள் வெளியாகி வந்தன. அதோடு, தேமுதிகவிலிருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விலகி திமுக, அதிமுகவில் இணையும் நிகழ்வுகளும் இன்றுவரை நடைப்பெற்று வருகின்றன. 

இந்த நேரத்தில்தான், கூட்டணி ஆட்சி என்கிற கருத்துக்கு உடன்பட்டிருந்தால் விஜயகாந்தே திமுக வோடுதான் கூட்டணி அமைத்திருப்பார் என்று திருமாவளவன் கூறியுள்ளார். மேலும், திமுகவும் ஆட்சியைப் பிடித்து இருக்கும். திமுக பிடிவாதமாக கூட்டணி ஆட்சிக்கு உடன்படவில்லை அதன் பிறகுதான் தேமுதிக மக்கள் நலக் கூட்டணியோடு இணைகின்ற ஒரு சூழல் ஏற்பட்டது – என்று அரியலூரில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் திருமாவளவன்.

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்