இந்தியா
Typography

மென்பொறியாளர் சுவாதி கொலையாளி எனப்படும் ராம்குமாரை விசாரணை காணொளி எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று, ராம்குமாரின் வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.  

ராம்குமாரின் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில், ஏற்கனவே ராம்குமாரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்துள்ளனர் என்பதை மேற்கோள் காண்பித்துள்ளார். எனவே, இப்போது போலீசார் ராம்குமாரை மீண்டும் காவலில் எடுத்து, கொலை நடந்த இடத்தில் என்ன நடந்தது என்பதை காணொளிக் காட்சியாக பதிவு செய்ய விசாரிக்க இருப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். 

அதில், இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார். ராம்குமாரை ஒரு முறை காவலில் எடுத்து விசாரணை செய்துள்ளதால், இனி விசாரிப்பதில் எந்தவிதத் தடையும் இல்லை என்றும், இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து, ராம்குமாரை போலீசார் காவலில் எடுக்க தடை விதிக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்றும் தெரிவித்த நீதிபதிகள் வழக்கறிஞரின் மனுவை நிறுத்தி வைத்துள்ளனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்