இந்தியா
Typography

ராஜஸ்தான் அரசு கோ சாலையில் பட்டினியால் பசுக்கள் பலியாகி உள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தானில்ஜ ஜெய்ப்பூர் அருகே அரசு கோசாலையில் பணியாளர்கள் கடந்த மே மாதத்திலிருந்து ஊதியம் வழங்க கோரிக்கை வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால்  கோ சாலையில் உள்ள பசுக்கள் பட்டினியால் வாடி வருகின்றன. இதில் பசி தாங்காமல் 500 பசுக்கள் பரிதாபமாகப் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.இதனால் - ராஜஸ்தானில் பாஜக அரசுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே ஹிங்கோனியாவில் உள்ள அரசு கோசாலையில் இறந்த பசுக்களின் உடல்கள் புல்டோசர் மூலம் அகற்றப்படுகின்றன. ஜெய்ப்பூர் அருகே கோசாலை ஒன்றில் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட் டதால், தீவனம் கிடைக்காமல் கடந்த 2 வாரங்களில் 500-க்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்தன.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே, அரசு சார்பில் ஹிங்கோனியா பசுக்கள் காப்பகம் (கோசாலை) இயங்கி வருகிறது. அதில்,பணிபுரியும்  ஒப்பந்தப் பணியாளர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை எனக் கூறி கடந்த மூன்று  மாத காலமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 8,000 பசுக்கள் உள்ள இந்த கோசாலையில் பணியாளர்கள் பணிக்கு வராததால், தீவனம் வழங்குவது, சாணம் அள்ளுவது மற்றும் பராமரிப்பு வேலைகள் நடக்கவில்லை. இதன் விளைவாக வாரக் கணக்கில் தீவனம் உட்கொள்ளாமலும், சேறு சகதியில் சிக்கியும் ஏராளமான பசுக்கள் இறந்ததாக தகவல் பரவியது.

தன்னார்வலர் குழுவினர் கோசாலையின் உள்ளே நுழைந்து பார்த்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும், 90 மாடுகளின் உடல்களை அப்புறப்படுத்தினர். இறந்த மாடுகளின் எண்ணிக்கை குறித்து அதி காரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், 500-க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்திருப்பதாக தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

பசுக்கள் யாவும் நோய்வாய்ப் பட்டு இறக்கவில்லை. பட்டினியால் மட்டுமே இறந்தன என்று அரசு கால்நடை மருத்துவர் தேவேந்திர குமார் யாதவ் கூறியுள்ளார் என்பதுக் குறிப்பிட்டது தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்