இந்தியா
Typography

பாட்டாளி மக்கள் கட்சி எனப்படும் பாமகவை தடை செய்வதுக் குறித்து மனுதாரர் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாமக, சித்திரைத் திருவிழா என்கிற பெயரில் நடத்தும் கட்சி விழாவில் சட்ட மீறல்கள் நடைபெறுகின்றன என்றும், அப்பாவி மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும், விபத்துக்கள் ஏற்படுகிறது என்றும் பொது நலமனு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கலாகி உள்ளது. மேலும்,அந்த மனுவில், இதுபோன்ற சிக்கல்கள், இன்னல்கள் பாமகவினால் நீடித்து வருவதால், அக்கட்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

அந்த பொது நல மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் முறையான அனுமதி பெற்று நடைப்பெற்று வரும் இந்த அரசியல் கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.வேண்டுமானால் மனுதாரர், தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்