இந்தியா
Typography

திருத்தம் செய்யப்பட்ட சரக்கு- சேவை வரி மசோதாவால் மாநில அரசுகளின் கவலை தீர்ந்தது என்று, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி  கூறியுள்ளார்.  

மாநிலங்களவையில் சரக்கு-சேவை வரி மசோதா ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.அதிமுக தவிர அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் குரல் வாக்கெடுப்புக்கு ஆதரவு அளித்தனர். அதிமுக எம்பிக்கள் மட்டும் குரல் வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்தனர் என்று தெரிய வருகிறது. 

இந்நிலையில் மசோதாவைத் தாக்கல் செய்த அருண் ஜெட்லி, திருத்தம் செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட்டு உள்ள சரக்கு-சேவை வரி மசோதாவால், மாநில அரசுகளின் கவலை தீர்ந்தது என்று கூறினார். இந்த மசோதாவால் மாநில அரசுகள்தான் அதிக ஆதாயம் பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மக்களின் நலன் கருதி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதாவால் நுகர்வோர் பயன் பெறுவார் என்றும் தெரிவித்தார். மாநில அரசுகளுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும் என்று தெரிவித்தார் அவர். 

வருகிற ஏப்ரல் மாதம் 1ம் திகதிமுதல் அமல்படுத்த உள்ள இந்த மசோதா அடுத்து சட்ட மன்றங்களின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்து, பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு அமலுக்கு வரும் என்று தெரிய வருகிறது. குறைந்த பட்சம் 15 சட்ட மன்றங்களிலாவது இம்மசோதாவாவுக்கு ஒப்புதல் கிடைக்க வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS