இந்தியா
Typography

1963ஆம் ஆண்டு பெரிய இடத்துப் பெண் என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பழம்பெரும் நடிகை ஜோதி லட்சுமி இன்று செவ்வாய்க்கிழமை காலமானார்.   

நடிகை ஜோதி லட்சுமி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழப்பெற்றவர். இவர் திரைப்படங்களில் பாடலுக்கு மட்டும் நடனமாடுவதில் ரசிகர்களிடையே புகழுடன் விளங்கினார். இவரது தங்கை ஜெயமாலினி, இவரது மகள் ஜோதி மீனா ஆகியவர்களும் நடிகைகளே. எம்ஜிஆர், என்டிஆர், சிவாஜி கணேசன் என்று பெரிய நடிகர்களின் படங்களில் நடித்தவர் ஜோதி லட்சுமி. 

இவர் கடந்த சில வருடங்களாக ரத்தப் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்