இந்தியா
Typography

திருமணத்துக்கு முன்னர் மணமக்களின் மருத்துவ சான்றிதழ் கட்டாயம் என்கிற விழிப்புணர்வை மக்களிடம் மத்திய- மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

திருமணத்துக்கு முன்னர் தமது கணவர் தமக்கு இருதய நோய் இருப்பதை தம்மிடம் தெரிவிக்கவில்லை என்றும், எனவே, அவருடன் இனி இணைந்து வாழ முடியாது என்றும் பெண் ஒருவர் தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருபாகரன் மேற்கண்ட கருத்தை வலியுறுத்தி உள்ளார். அதாவது, திருமண வாழ்க்கையின் சந்தோசம் என்பது மண மேடையோடு நின்றுவிடக் கூடாது என்று தெரிவித்துள்ளார். 

திருமணத்துக்கு முன்னர் ஒரு ஆணோ, பெண்ணோ தமது மருத்துவ சான்றிதழை பெற்றுவிடுவது கட்டாயம் என்கிற விழிப்புணர்வை மக்களிடம் மத்திய-மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். தமக்கு இருக்கும் இருதய நோய், புற்று நோய் உள்ளிட்டவைகளை மறைத்து ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ளும்போது பெண் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார். அவரை எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாமல் போய்விடுகிறது. இது பெண்ணுக்கும் பொருந்தும் என்பதால், திருமணத்துக்கு முன்னர் மணமக்களின் மருத்துவ சான்றிதழ் கட்டாயம் எனபதை மக்களும் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்