இந்தியா
Typography

ஆகஸ்ட் 15 ஆம் தேதி மட்டும்  2000 மதுக்கடைகள் குறைக்கப்படும் என்கிற அரசாணையில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளார். 

படிப்படியாக மது விளக்கு அமலுக்கு வரும் என்று உறுதி அளித்து, தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளார். உறுதி அளித்தபடி, ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று சுமார் 1000 முதல் 2000 மதுக்கடைகளை குறைக்க முதலமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளார். அதோடு, இனி 5 கிலோ மீட்டருக்கு ஒரு கடை என்ற விகிதத்தில்  கடைகள் இருக்கும்படி உள்ள அரசாணை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார் அவர். 

இதன் மூலம் மதுவிலக்கின் முதல் படியான கடைகள் குறைப்பினை கையில் எடுத்துள்ளார் ஜெயலலிதா. இது போதாது என்று நினைக்கும் அவர் வரும் ஆகஸ்ட் 16 முதல் மதுக்கடைகளை பகல் 2 மணி முதல் இரவு 9.30 மணி வரை இயக்க உத்தரவு பிறப்பிக்க உள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் அனைத்து வகையான பார்களையும் இழுத்து மூடவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாகவும் மதுக்கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இவை எல்லாவற்றையும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அறிவிக்க உள்ளார் என்று தலைமை செயலாளர் திரு.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS