இந்தியா
Typography

ரயில்வே துறையில் மூன்றில் இரண்டு பங்கு வருவாய் சரக்கு ரயில்கள் மூலமே கிடைக்கிறது என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். 

செகந்திரா பாதத்தில்  சரக்கு ரயில்கள் கால அட்டவணையைத் துவக்கி வைத்து பேசினார் சுரேஷ் பிரபு. அப்போது கால அட்டவணைக்கு ஏற்ப சரக்கு ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறினார். மேலும், பட்ஜெட்டில் அறிவித்தபடி சரக்கு ரயில்களின் கட்டணம் விரைவில் குறைக்கப்படும் என்று கூறினார். 

பயணிகள் ரயில்களின் முதலீடுகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்த அவர், ரயில்வே துறையில் மூன்றில் ஒரு பங்கு வருவாய் சரக்கு ரயில்கள் மூலமே கிடைக்கின்றன என்றும் தெரிவித்தார்.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS