இந்தியா
Typography

சுதந்திர தினத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயலக்கூடும் என்பதால், சென்னை விமான நிலையத்துக்கு 7 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.  

ஆகஸ்ட் 15ம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.மத்திய தொழிற்படைப் பாதுகாப்பு, விமான நிலைய காவலர்கள் பாதுகாப்பு என்று பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. எந்நேரமும் கண்காணிப்பு கேமிரா மூலம் மத்திய தொழிற்படைப் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வருகிற 20ம் திகதி வரை சென்னை விமான நிலையத்தினுள் பார்வையாளர்கள் அனுமதிக்குத்  தடை விதிக்கப்பட்டு உள்ளது.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS