இந்தியா
Typography

அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் அதிருப்தி எம் எல் ஏவான கலிக்கோ புல், பாஜக தூண்டுதலால் அதிருப்தி எம் எல் ஏக்களின் ஆதரவோடு அருணாச்சல பிரதேஷில் ஆட்சி அமைத்தார். காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. விசாரணையில் கலிக்கோ புல்லின் ஆட்சி சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தத்து.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் கலிக்கோ புல் சில வாரங்களுக்கு முன் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக நேர்ந்தது. ஆட்சி பறிபோனதால் கலிக்கோ புல் தொடர்ந்து மனஅழுத்தத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் அவரது வீட்டில் கலிக்கோ புல் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தூக்கில் தொங்கிய அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்