இந்தியா
Typography

சேலத்திலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட 342 கோடி ரூபாய் வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர் சீஸ் வங்கியிலிருந்து 5 பொதுத்துறை வங்கிகளுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பணம் சேலத்திலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டது என்று தெரிய வருகிறது. நேற்று இரவு கூடுதலாக ஒரு ரயில் பெட்டியை இணைத்து, போலீஸ் பாதுகாப்பபுடன் சீல் வைக்கப்பட்டு வந்த வங்கிப் பணம் கொள்ளை போயுள்ளது காலையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் தெரிய  வந்துள்ளது.போலீசார் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்ட பெட்டியில் பணம் வந்தபோதும்,சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், அதிகாரிகள் பணத்தை சோதனை செய்தபோது, பெட்டிகள் உடைக்கப்பட்டு மேற்கூரை வழியாக கொள்ளையர்கள் பணத்தைத் திருடி உள்ளனர். 

ரயிலின் மேற்கூரையை கியாஸ் ட்ரில்லிங் மூலம் துளையிட்டு கொள்ளையர்கள் கொள்ளையடித்து உள்ளனர் என்றும், இது சென்னையில் நடைபெற்ற கொள்ளையல்ல என்றும் தகவல் வெளியாகி உள்ளது. உடனடி குறுகிய கால விசாரணையில், பணம் விருத்தாசலத்தில் கொள்ளை போயிருக்கிறது என்று கண்டறியப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உளது.சேலம் போலீசார், சென்னை ரயில்வே போலீசார், சேலம் வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் என்று கூடி ஆலோசனை செய்து வருகின்றனர். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS