இன்று தமிழகம் முழுவதும் அதாவது மிக  முக்கியமாக காரிவி  டெல்டா பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை மிக கோலாகலமான முறையில் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். 

Read more: இன்று தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா மிகவும் கோலாகலமான முறையில் கொண்டாட்டம்

பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், கள் விற்பனைக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

Read more: பீகாரில் கள் விற்பனைக்கு அனுமதி

சென்னை உயர் நீதிமன்றத்தை,தமிழக உயர் நீதிமன்றம் என்கிற பெயர் மாற்றம் செய்ய கோரிக்கை வைக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

Read more: தமிழக உயர் நீதிமன்றம் என்கிற பெயர் மாற்றத்துக்கு சட்டப்பேரவையில் தீர்மானம்

 

இன்று உலக தாய்ப்பால் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்தும் வகையிலும், தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்தும் வகையிலும், உலக மக்களுக்கு தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், உலக தாய்ப்பால் தினம் ஆகஸ்ட் 1ம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தொடங்கி 7ம் திகதி வரை இதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்கள், நாடகங்கள், நிகழ்ச்சிகள் என்று பல்வேறு அமைப்பினர் நடத்தி, மக்களுக்கு குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவார்கள்..

உலகில் கலப்படம் செய்ய முடியாத ஒரே உணவு, குழந்தைகளுக்கான தாய்ப்பால்தான் என்பதால், இந்த கலப்படமில்லாத விலை மதிப்பில்லாத தாய்ப்பாலை, புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் எக்காரணம் கொண்டும்,உங்களது குழந்தைகளுக்கு கொடுக்காமல் இருந்துவிடாதீர்கள். தாய்ப்பால் கொடுக்காத தவிர்ப்பதன் மூலம் பிறந்த பச்சிளம் குழந்தையின் உணவு உரிமையைப் பறித்துவிடாதீர்கள்.

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, நடிகர் ரஜினிகாந்தை புதுவை மாநிலத்தின் சுகாதாரத்துறை தூதுவராக பொறுப்பேற்க அழைப்பு விடுத்துள்ளார். 

Read more: கிரண்பேடி, ரஜினிகாந்துக்கு அழைப்பு

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற வளாகத்தின் முன் போராட்டம் நடத்த உள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

Read more: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று போராட்டம்: சந்திரபாபு நாயுடு

குறைவான சம்பளம் அதிக பணிச்சுமை காவலர் பற்றாக்குறை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், சட்டம், ஒழுங்கு, அமைதியைப் பாதுகாப்பதில் அ.தி.மு.க. அரசு அக்கறையோடு இருக்கிறது என்றும், தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்குகிறது என்றும், முதலமைச்சர் ஜெயலலிதாவும், அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டாலும், தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் தான் சட்டம் ஒழுங்கை இடையறாது பேணிக் காப்பதிலும், சமுதாய நல்லிணக்கம் மற்றும் நல்லுறவு போற்றி நலிந்த பிரிவினர், மகளிர் ஆகியோரின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், தமிழகக் காவல் துறை புகழ் பெற்று விளங்கியது என்று சொன்னால் அது மிகையல்ல; நடுநிலையாளர்களும் ஏற்றுக் கொள்வர். மக்கள் பணிக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்
கொண்டு கடமையாற்றி வரும் காவல் துறை அலுவலர்களுக்காக, அவர்கள் சலிப்பின்றி உற்சாகத்துடன் உழைத்திட வேண்டுமெனும் நோக்கில், தி.மு. கழக அரசு காலத்தில் நிறைவேற்றிய நலத் திட்டங்களும், அளித்துள்ள சலுகைகளும் பலப் பல.

காவல் துறையினரின் கஷ்ட நஷ்டங்களை எதிர்க் கட்சியாக இருந்த போதே, நான் எழுதிய நாடகத்தில் இடம் பெறச் செய்து, பொறுப்புக்கு வந்தவுடனேயே அதாவது 1969ஆம் ஆண்டில் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன், தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற திரு. ஆர்.ஏ. கோபாலசாமி, ஐ.சி.எஸ்., அவர்கள் தலைமையில், இந்தியாவிலேயேயே முதல் முறையாக, காவல் துறையினரின் நிலைமைகளை ஆராய்ந்து பரிந்துரைக்க ஒரு கமிஷனை நியமித்தேன் என்பதை காவல் துறை நண்பர்களே நன்கறிவார்கள். அந்தக் கமிஷன் ஆய்வு செய்து 133
பரிந்துரைகளை செய்த போது, அதில் 115 பரிந்துரைகளை உடனடியாக ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தியவனும் நான் தான்.

1976 முதல் 1989 வரை திராவிட முன்னேற்றக் கழகம் ஆளுங்கட்சியாக இல்லை; அப்போது காவல் துறையினரின் சிரமங்களைப் பரிசீலிக்க எந்தக் கமிஷனும் போடப்படவில்லை. 1989ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக தி.மு. கழகம் ஆட்சி அமைத்த பிறகு தான், முன்னாள் தலைமைச் செயலாளர், பி. சபா நாயகம், ஐ.ஏ.எஸ்., அவர்களுடைய தலைமையில் இரண்டாவது போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டு, அவர்கள் தந்த 112 பரிந்துரைகளில் 102 பரிந்துரைகள் மீது முடிவெடுத்து 1991ஆம் ஆண்டு ஜனவரியில் ஆட்சி கலைக்கப்படுவதற்கு முன்பு 79 பரிந்துரைகளை
நடைமுறைப்படுத்தினேன் என்பது வரலாறு.

மீண்டும் 2006ஆம் ஆண்டு கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு தான், ஓய்வு பெற்ற உள்துறைச் செயலாளர் பூரணலிங்கம், ஐ.ஏ.எஸ்.ட, அவர்கள் தலைமையில் மூன்றாவது காவல் ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த ஆணையம் பரிந்துரைத்த 444 பரிந்துரைகளில் 278 பரிந்துரைகள் அரசினால் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

1969ஆம் ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்ட தமிழ்நாடு முதல்வரின் காவல் பதக்கம் அண்ணா பதக்கம், பாராட்டத்தக்க வகையில் பணியின்பால் ஈடுபாடு கொண்ட காவல் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கள்ளச் சாராயத்தை மிகச் சீரிய முறையில் தடுத்து சாதனை புரியும் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு 1996ஆம் ஆண்டு முதல் உத்தமர் காந்தி பதக்கமும்
(காந்தியடிகள் காவல் விருது) பண முடிப்பும் கொடுக்கப்படுகிறது.

தி.மு. கழக ஆட்சியில் காவல் துறையினருக்குச் செய்யப்பட்ட சாதனைகளில் ஒரு சில தான் இவை. ஆனால் இப்போது காவலர்களின் நிலை என்ன? 27-7-2016 தேதிய “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேடு “Tamil Nadu Police Lowest Paid in South, Telangana Tops List -- Many Cops Forced to Work 7 Days a Week” என்ற தலைப்பில் ஒரு நீண்ட செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்தக்
கட்டுரையில் சில முக்கியமான பகுதிகள் வருமாறு :-

“Doubts about morale of the TN Police being low may not be unfounded. From Constables to Deputy Superintendents of Police, they are among the lowest paid in the country. Bureau of Police Research and Development statistics show TN Police are the most poorly paid among the Southern States” (தமிழகக் காவல் துறையினரின் நோக்கும் போக்கும் தாழ்ந்து போய் விட்டதோ என்ற சந்தேகத்திற்கு அடிப்படை இல்லாமல் இல்லை. காவலர் முதல் துணைக் கண்காணிப்பாளர் வரை நாட்டிலேயே மிகக் குறைவான ஊதியத்தையே பெறுகின்றனர். தென்னகத்தில், தமிழ்நாட்டில் தான் காவல் துறையினர் மிகக் குறைந்த ஊதியம் பெறுகின்றனர் என்று அதிகார பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன)

காவலர் ஒருவரின் மாத ஊதியத்தை எடுத்துக் கொண்டால், தெலுங்கானா மாநிலத்தில் காவலர் ஒருவரின் தொடக்க ஊதியம் 16,400 ரூபாய். கர்நாடகாவில் தொடக்க ஊதியம் 11,600 ரூபாய். கேரளாவில் 10,480 ரூபாய். ஆந்திராவில் 8,440 ரூபாய். ஆனால் தமிழ் நாட்டிலோ காவலர் ஒருவரின் தொடக்க ஊதியம் 5,200 ரூபாய்தான். தெலுங்கானா மாநிலத்தில் காவலர் ஒருவர் வாங்கும் ஊதியத்தில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே தமிழகத்திலே ஊதியமாகக் கிடைக்கிறது.

சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மாத ஊதியத்தை எடுத்துக் கொண்டால் தெலுங்கானா மாநிலத்தில் 28,940 ரூபாய் - கர்நாடகாவில் 20,000 ரூபாய் - கேரளாவில் 18,980 ரூபாய் - ஆந்திராவில் 14,860 ரூபாய் - தமிழ்நாட்டில் 9,300 ரூபாய்தான்.

இன்ஸ்பெக்டர் ஒருவரின் மாத ஊதியத்தை எடுத்துக் கொண்டால், தெலுங்கானா மாநிலத்தில் 31,460 ரூபாய் - கர்நாடகாவில் 21,600 ரூபாய் - கேரளாவில் 20,740 ரூபாய் - ஆந்திராவில் 16,150 ரூபாய் - தமிழ்நாட்டில் 9,300 ரூபாய்தான்.

டி.எஸ்.பி. ஒருவரின் மாத ஊதியத்தை எடுத்துக் கொண்டால், தெலுங்கானா மாநிலத்தில் 40,270 ரூபாய் - கர்நாடகாவில் 28,100 ரூபாய் - கேரளாவில்
24,040 ரூபாய் - ஆந்திராவில் 20,680 ரூபாய் - தமிழ்நாட்டில் 15,600 ரூபாய்தான்.

தமிழக காவலர் ஒருவரிடம் வேலைப் பளு பற்றி கேட்டபோது, “காவலர் ஒருவர் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றக் கூடாது என்று விதிகள் இருந்த போதிலும், காவலர்களில் பலர் வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் 24 மணி நேரம் பணியாற்றுகிறார்கள். முதல் நாள் இரவு நீண்ட நேரத்திற்குப் பிறகு வீடு திரும்பினாலும், மறுநாள் காலை 7 மணி அணிவகுப்புக்கு காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். காவல் துறையில் இளைஞர் படையில் கடந்த ஆண்டு பணியிலே சேர்ந்த 11,000 பேரில், 2674 பேர் விலகி விட்டார்கள், 8,326 பேர் தான் காவலர் பயிற்சி பெறுகிறார்கள்” (ஆயிரக்கணக்கானோர் விலகியதற்குக் காரணம் இடையறாத பணியும், குறைவான சம்பளமும் தான்) என்றெல்லாம்
பதிலளித்திருக்கிறார்.

இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறும்போது, காவல் துறையினருக்கு இந்த அளவுக்குக் குறைந்த ஊதியம் அளிப்பதால்தான் அவர்கள் லஞ்சம் வாங்கத் தள்ளப் படுகிறார்கள். காவலர் ஒருவரின் வீட்டு வாடகைப் படி 840 ரூபாய் தான் என்கிற போது, சென்னையில் வாடகைக்கு எப்படி ஒரு வீட்டை அவரால் பிடிக்க முடியும் என்றும் கேட்டிருக்கிறார்.

மகளிர் காவலர் ஒருவர் கூறும்போது 2009ஆம் ஆண்டு பணியிலே சேர்ந்த போது காவல் துறையில் இணைந்தது பற்றி மனத்தளவில் ஒரு பெருமை இருந்ததாகவும், அது தற்போது அழிந்து விட்டது என்றும் வருத்தப்பட்டிருக்கிறார். இது தான் தமிழகக் காவல் துறையினரின் நிலைமை.

தமிழகத்திலே தான் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிரச்சினைக்காக மக்கள் போராட வேண்டிய நிலைமை இந்த ஆட்சியிலே உள்ளது. போராட்டங்களா? அ.தி.மு.க. ஆட்சியிலா? இல்லவே இல்லை என்று முதலமைச்சர் இப்போது மறுக்கக் கூடும். ஆனால் 22-9-2015 அன்று காவல் துறை மானிய விவாதத்திற்கு பதில் கூறிய முதலமைச்சர் ஜெயலலிதாவே, தன்னுடைய உரையில், “உண்மை நிலைமை என்ன? காவல்
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு கூடத்தினர் மேற்கொண்ட ஆய்வின்படி தமிழ்நாட்டில்தான் அதிகப்படியான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன எனத் தெரிய வருகிறது. இது நாட்டின் ஒட்டு மொத்த எண்ணிக்கையிலே 25 விழுக்காட்டிற்கும் அதிகமாகும். அதாவது, ஒட்டு மொத்தமாக இந்தியாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட் டங்களில் 25 சதவிகிதம், தமிழ்நாட்டில் மட்டுமே நடைபெற்றுள்ளன” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் இந்த ஆட்சியில் காவல் துறையில் உள்ள காலிப் பணி இடங்கள் நிரப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. காவல் துறையினரின் மொத்த அனுமதிக்கப்பட்ட இடங்கள் 1 இலட்சத்து 21 ஆயிரத்து 14 பேர் என்றால், அதிலே 19 ஆயிரத்து 157 இடங்கள் காலியாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் காலிப் பணி இடங்களை நிரப்ப வேண்டுமென்று சென்னை உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதியே உத்தரவிட்ட போதிலும் அந்த இடங்கள் நிரப்பப்பட வில்லை. காவல் துறை அதிகாரிகள் வீடுகளிலும், ஓய்வு பெற்ற அதிகாரிகள் வீடுகளிலே கூட
“ஆர்டர்லி” என்ற பெயரால் காவல் துறையினர் பணியாற்றும் போக்கு இன்னமும் தொடருகிறது.

இப்படி இரண்டு பேர் செய்ய வேண்டிய பணியை ஒருவரே ஏற்றிட வேண்டிய தாங்கவியலாப் பணிச்சுமை, மிகக் குறைவான சம்பளம், குடும்பத்தாரின் தேவைகள் - குழந்தைகளின் கல்வி - நாளும் அதிகரித்து வரும் விலைவாசி போன்றவற்றினால் ஏற்படும் நெருக்கடி - மன அழுத்தம், மேலதிகாரிகள் நடத்தும் முறையால் உண்டாகும் தன்மானச் சிதைவு ஆகியவற்றால் தமிழகக் காவல் துறையினர் குறிப்பாக அடுத்தடுத்துச் சாதாரண நிலையில், காவலர் முதல் துணைக் கண்காணிப்பாளர் வரை பணியாற்றுவோர், ஒவ்வொரு நாளும் கடக்க வேண்டிய பிரச்சினைகளும், அனுபவித்துத் தீர வேண்டிய அவலங்களும் எண்ணிலடங்காதவை. பாதிக்கப்படும் பொது மக்கள், ஆதிக்கம் செலுத்தும் மேலதிகாரிகள், இன்னலுறும் குடும்பத்தினர் என்ற முக்கோணத்திற்குள் சிக்கித் தவித்திடும் சாதாரண நிலைக் காவல் துறையினரை அரசு, காக்கும் கரங்களாக இருந்து அரவணைத்து, கடமையாற்றிட அனுமதித்திட வேண்டும்.என்று கோரிக்கைகள் பல வைத்துள்ளார் கருணாநிதி.

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்