இந்தியாவில் மக்களுக்குத் தெவையான மருந்தினை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ததாக, சமூக வலைத்தளங்களில் பரவும் அவதூறுகளை இந்திய மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பின் அறிக்கைகள் நிராகரிக்கின்றன.

Read more: இந்தியத் தேவைக்கான மலேரியா மருந்து கையிருப்பில் உண்டு.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளதென மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது.

Read more: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு !

ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா சத்தியராஜ் நடிகர் சத்யராஜின் மகள். அவர் தமிழக முதல்வருக்கு தனது ஆய்வின் முடிவு ஒன்றை முன் வைத்து வறிய குடும்பங்களின் குழந்தைகளை காப்பாற்றுமாறு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அது வருமாறு

Read more: வறுமையில் வாடும் குழந்தைகளை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறேன் : நடிகர் சத்தியராஜின் மகள் முதலமைச்சரிடம் வேண்டுகோள் !

கொரோனா பாதிப்பு சிகிச்சைகளுக்கு தடுப்பு மருந்துகள் இல்லாதவேளையில், மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் பலனளிப்பதாக நிபுணர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்தியாவிடம் அமெரிக்கா அதிக அளவில் அந்த மருந்தைக் கோரியது.

Read more: மருந்துக்காக மிரட்டியது அமெரிக்கா, மனிதாபிமானத்தில் தடை விலக்கியது இந்தியா !

தமிழக அளவில் கொரானா தொற்றில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது சென்னை மாநாகரம். ஊரடங்கை மதிக்காத வடசென்னையின் முக்கிய பகுதியான ராயபுரத்தில் 40 பேர் கொரானாவின் பிடியில் சிக்கியுள்ளனர்.

Read more: கோரானா தொற்றில் சென்னைக்கு முதலிடம் !

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 24-ந் திகதி இரவு அறிவித்த 3 வாரகால ஊரடங்கில் இருவாரங்கள் கழிந்து இன்னமும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், ஊரடங்கினை நீடிப்பதா? முடிவுக்கு கொண்டு வருவதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டுவருதாகத் தெரிகிறது.ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது இந்தியாவில் கொரோனாவால் பாதிப்புற்று இருந்தவர்கள் 519 பேர், உயிரிழந்தவர்கள் 9 பேர். ஊரடங்கு அறிவிக்கபட்ட கடந்த 15 நாட்களில் கொரோனா பாதிப்புகு உள்ளானவர்கள் எண்ணிக்கை சுமார் 10 மடங்கு அதிகரித்துள்ளது.

15 நாட்களாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். தவிர்க்க முடியாத பணியைத் தவிர வேறு எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது என்ற போதும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ள போதிலும், அவசரவேலைகளுக்காக வெளியே வருபவர்கள் கூட அதை பொருட்படுத்தாமல் நடந்து கொள்வது தெரிகிறது.

மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனாவால் ஏற்படும் உயிர் இழப்புகளும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தபடியேதான் இருக்கிறது. வைரஸின் தாக்கம் அதிகமாவதற்கு முன்னரேயே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அதன் பரவும் விகிதம் குறைவாக இருந்தாலும், இந்த நாட்களில் தொற்றாளர்கள் முழுமையாக அடையாளங் காணப்பட்டுவிட்டார்களா எனும் சந்தேகம் இருந்தபடியே உள்ளது.

ஊரடங்கு முடிவடைய இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. அதற்குள் நோய்க்கிருமி பரவுவது கட்டுக்குள் வந்துவிடுமா? என்பது உறுதிபடத் தெரியவில்லை. வைரஸின் பரவல் மூன்று வாரகாலத்துக்குப் பினதாக அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உளளதாகவும் மருத்துவத்துறையினர் கருதுகின்றனர். இவை காரணமாக, பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை 14ந் திகதியின் பின்னரும் நீட்டிக்க வேண்டும் என்று பல மாநிலங்களும், நிபுணர்களும் மத்திய அரசை கேட்டுக்கொண்டு இருப்பதாகவும், அதுபற்றி மத்திய அரசு யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


ஊரடங்கை நீட்டித்தால்தான் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்று பல மாநிலங்கள் கருதுகின்ற நிலையில், ஊரடங்கு தொடர்பாக, வரும் சனிக்கிழமை 11 ஆம் திகதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக்குப் பிறகு, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும் எனத் தெரிய வருகிறது.

இதேவேளை, அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் ஊரடங்கு நிலவரம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசித்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

வணக்கத்துக்குரிய பிரதமர் அவர்களுக்கு ! திறந்த மடல் என நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள இம் மடலில்;

Read more: வணக்கத்துக்குரிய பிரதமர் அவர்களுக்கு ! : கமலின் திறந்த மடல்.

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்