பலமான அரசியல் மோதல் நடைபெற்று வரும் களமாக மாறியுள்ள மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் புதிய முதல்வர் தனது ஆதரவினை நீருப்பிக்கவேண்டும். அதற்காக நாளை மாலை 5 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read more: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு !

நேற்று முன்தினம் அ.தி.மு.க. பொதுக்குழு கூடிய போது, அ.தி.மு.க. சட்ட விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அறிய வருகிறது. குறிப்பாக அ.தி.மு.க. வின் அடிப்படை உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து இருப்பவர்கள் மட்டுமே, உள்கட்சி தேர்தல், உறுப்பினர் தேர்தல்களில் போட்டியிட முடியும் எனத் திருத்தம் செய்யப்பட்டது.

Read more: சுப்பிரமணியன் சுவாமியின் சொடக்கும் அதிமுகவின் (நடவடிக்கை) எடுப்பும்.

தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மகாராஷ்டிராவின் புதிய அரசுக்கு எதிராக சிவசேனா, தேசிவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டாகத் தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Read more: மகாராஷ்டிரா விவகாரம் : மக்களவை, மாநிலங்களவைகளில் குழப்பம். நீமன்றத் தீர்ப்பு நாளை !

மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா நேற்றைய தினம் ஆட்சி அமைத்தது முதல் அரசியற்களம் சந்திப்புக்கள், பேட்டிகள், என்பவற்றால் நிமிடத்துக்கு நிமிடம் அமர்களப்படுகிறது. இதற்கிடையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியுள்ளதாகப் பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more: மாராட்டிய அரசியற்களம் : தலைவர்கள் நீதிமன்றில், உறுப்பினர்கள் ஹோட்டல்களில்.

சபரிமலை வரும் அனைத்து வயதுப் பெண்களுக்கும் பாதுகாப்புத் தரமுடியாது. நீதிமன்ற அனுமதியுடன் வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு தர முடியும், என கேரள அரசு தெரிவித்துள்ளது.

Read more: சபரிமலை செல்ல நீதி வேண்டும் - கொச்சின் வந்த திருப்தி தேசாய் குழு

வெற்றிடம் பற்றிச் சிலர் பேசுகின்றார்கள். அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் ஏதும் இல்லை என அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

Read more: இருவிரல் புரட்சி நிச்சயம் ஏற்படும் - துணைமுதல்வர் ஓ. பன்னீர்ச்செல்வம்.

நாடு முழுமைக்கும் காவிமயப்படுத்துவோம் எனும் பேராபத்துமிக்க இந்துத்துவ முழக்கத்தை முன்வைக்கிற மத்தியில் ஆளும் பாஜக அரசு அதனைச் செயற்படுத்தும் நோக்கில் சனநாயக மாண்புகளையும், சட்டநெறிகளையும் குலைத்து பணப்பேரத்தில் ஈடுபட்டு, அதிகார அத்துமீறலை அரங்கேற்றி ஆளுநரின் மூலம் மாநிலங்களின் ஆட்சியைப் பிடிக்கும் போக்கு வன்மையானக் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாராட்டிய அரசியல் நிலவரம் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more: மராட்டியத்தில் மாபெரும் சனநாயகப்படுகொலை ! – சீமான் கண்டனம்.

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்