“டிஜிட்டல் இந்தியா திட்டத்தினை மிக எளிமையானதாக மாற்றி வருகிறோம். டிஜிட்டல் முறையால் கிராமப்புறங்கள் பயனடைய வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

Read more: ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தை மிக எளிமையானதாக மாற்றி வருகிறோம்: மோடி

‘அக்பர் மிகப்பெரிய பேரரசர் இல்லை. பேரரசர் என்ற பதத்துக்கு பொருத்தமானவர் மகாராணா பிரதாப்பே” என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ஐ.எம்.ஆர்.டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-

“சுய மரியாதையில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாத மகாராணா பிரதாப்பே மிகப்பெரிய பேரரசர் என்ற பட்டத்துக்கு பொருத்தமானவர். இந்திய வரலாற்றில் மிகச்சிறந்த ஆட்சியாளராக பிரதாப் இருந்தார்.

அக்பரின் தூதுக்குழுவிடம், தான் ஒருநாளும் வெளிநாட்டவரையோ, இந்து அல்லாத ஒருவரையே பேரரசராக ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று கூறும் துணிச்சல் மகாரணா பிரதாப்புக்கு மட்டுமே இருந்தது. வரலாறுகளை சிதைத்து தவறாக வழிகாட்டப்படும் சமூகத்தால், ஒரு போதும் வலுவான எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்க முடியாது. மகராணா பிரதாப் வாழ்க்கை வராலாறு மற்றும் தீரம் ஆகியவற்றை மக்கள் ஊக்கமாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் மேற்கண்ட கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. உத்தர பிரதேச பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல் முறையல்ல.

கடந்த ஆண்டு, மீரட் தொகுதி பாஜக எம்.எல்.ஏவான சன்கீத் சோம், முகலாய பேரரசர்கள் துரோகிகள் எனவும் அவர்களின் பெயர்களை வரலாறு பாடப்புத்தகங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.

அதேபோல், பல்லியா தொகுதி பாஜக எம்.எல்.ஏவான சுரேந்திர சிங், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலின் பெயரை, ராமர் மகால் என்றோ கிருஷண மகால் அல்லது ராஷ்ட்ர பகத் மகால் என்றோ மாற்ற வேண்டும் என கூறி சர்ச்சையில் சிக்கியது நினைவிருக்கலாம்.

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கப்பட்ட வழக்கில், ‘தகுதி நீக்கம் செல்லும்’ என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், ‘தகுதி நீக்கம் செல்லாது’ என்று நீதிபதி சுந்தரும் தீர்ப்பளித்துள்ளனர். 

Read more: 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம்; ‘செல்லும்’ என இந்திரா பானர்ஜியும், ‘செல்லாது’ என சுந்தரும் தீர்ப்பு!

மறைந்த ஜெயலலிதா ஜெயராமின் கொள்கையின்படி சென்னையை குடிசைகள் இல்லா நகராக மாற்றிக் காட்டுவோம் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

Read more: சென்னையை குடிசைகள் இல்லாத நகராக மாற்றிக் காட்டுவோம்: ஓ.பன்னீர்செல்வம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்க கோரும் தமிழக அரசின் கோரிக்கை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். 

Read more: ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்!

“நரேந்திர மோடி, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் உருவாகும் மெகா கூட்டணி, பா.ஜ.க.வை வீழ்த்தும்”என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

Read more: பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி: ராகுல் காந்தி அறிவிப்பு!

தமிழகத்தில் பா.ஜ.க.வின் ஆதிக்கம் என்பது, ஜெயலலிதா ஜெயராமின் மரணப்படுக்கையில் இருந்து ஆரம்பித்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. 

Read more: தமிழகத்தில் பா.ஜ.க.வின் ஆதிக்கம் ஜெயலலிதாவின் மரணப்படுக்கையில் ஆரம்பித்தது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்