Thursday, Oct 08th

Last update02:42:12 PM

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை விசாரணை; இருவர் கைது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் இருவரை குற்றப்புலனாய்வுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

Read more...

நாட்டில் இனிமேல் எந்தவித அடிப்படைவாதத்துக்கும் இடமில்லை: மனோ கணேசன்

மத்திய கொழும்பின் பார்பர் வீதி என்ற மகா வித்தியாலய வீதியின் 36ஆம் தோட்டத்தில் அமைந்துள்ள இந்துக் கோவிலின் பூஜைகள் மற்றும் தேர்த் திருவிழா எந்த வித தடையும் இன்றி நடைபெற வேண்டும் என்பது எனது உறுதியான நிலைப்பாடு ஆகும். இந்த நாட்டில் இனிமேல் எந்தவித அடிப்படைவாதத்துக்கும் இடம் கொடுக்க முடியாது என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more...

பாராளுமன்ற அமர்வுகளுக்கு தலைமை தாங்க 10 பேர் கொண்ட குழு சபாநாயகரால் நியமனம்!

பாராளுமன்ற அமர்வுகளின்போது சபைக்குத் தலைமை தாங்குவதற்கு 10 பேர் கொண்ட குழுவொன்று சபாநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்பட்டுள்ளது. 

Read more...

ஜ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத அமைப்பில் 7 இலங்கையர்கள்(?)

சிரியா உள்ளிட்ட மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இயங்கும் ஜ.எஸ்.ஐ.எஸ் (ISIS) எனும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பில் இலங்கையைச் சேர்ந்த 7 பேர் இணைந்து செயற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Read more...

காணாமற்போனோர் தொடர்பான மேலதிக சாட்சியங்கள் பதியப்படுகின்றன: மக்ஸ்வெல் பரணகம

காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் குறித்து மேலும் சாட்சிகளை விசாரணை செய்யும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். 

Read more...

இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுக்களை ஆரம்பித்து விட்டோம்: ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் ஐந்து தசாப்த காலத்தையும் தாண்டி நீடிக்கும் இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது தொடர்பிலான பேச்சுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடனும், சிவில் சமூக தரப்புக்களுடனும் புதிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read more...

கூட்டுப் பாலியல் வல்லுறவு; 4 இராணுவத்தினருக்கு யாழ் மேல் நீதிமன்றம் 30 வருட சிறை விதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு இரண்டு பெண்கள் மீது 4 இராணுவ வீரர்கள் மேற்கொண்ட கூட்டுப் பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்கில், குறித்த 4 இராணுவத்தினருக்கும் யாழ் மேல் நீதிமன்றம் 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 

Read more...

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் விவகாரம்; கைதான புலனாய்வுப் பிரிவினரின் கையடக்கத் தொலைபேசிகள் ஆய்வு!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போன விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு பிரிவினரின் கையடக்க தொலைபேசி விபரங்கள் இன்று புதன்கிழமை ஆய்வுக்குட்படுத்தப்படவுள்ளதாக தெரிகின்றது. 

Read more...

ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில் ஐ.ம.சு.கூ உறுப்பினர்கள் போராட்டம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்து நிறைவேற்றியுள்ள தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதன் மூலம் புதிய அரசாங்கம் நாட்டினைப் பாதுகாக்கும் படைவீரர்களை காட்டிக் கொடுத்துள்ளதாக தெரிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்துக்குள் நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Read more...

More Articles...

comments powered by Disqus