இலங்கை

பிணைமுறி தொடர்பான குற்றவாளிகள் கண்டிப்பாகத் தண்டனை பெறுவார்கள் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் அனைத்து பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை சந்தித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட முடியாது போனாலும், பதவியை எதிர்பார்க்காது அரசியலில; ஈடுபவேன் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும், பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையும், ஒன்றாக வெளிவருமென எதிர்பார்க்கவில்லை. ஆனால் இலங்கை மத்திய வங்கி பிணைமுறி அறிக்கை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு விவாதம் நடத்தக் கோரியவர்கள் அனைவரும், பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்ததும் அமைதியாகவுள்ளனர்.

பிணைமுறி தொடர்பான விடயங்கள் எனக்குப் பெரும் சவாலாக இருந்தாலும், இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும். மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பக்கங்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுவது பொய்யானது. அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை.

கடந்த மூன்று வருடங்களில் மனித உரிமைக்கு எதிரான எவ்வாறான செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. ஆனால் இப்போதும் ஐ.நா. சென்று சிலர் எனது ஆட்சிக்காலத்தில் மனித உரிமைக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெற்றதாக முறையிடுகின்றனர். கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமைக்கு எதிரான செயற்பாடுகளை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு கால அவகாசம் தேவை. அதை நாம் சர்வதேசத்திடம் கேட்டிருந்தோம். சர்வதேசமும் எம்மில் நம்பிக்கை வைத்து மேலதிகமாக இரண்டு வருடங்கள் தந்துள்ளது.

மனித உரிமை தொடர்பான நடவடிக்கைளை அவசரமாக செய்யமுடியாது. அவ்வாறு நாம் செய்ய முயன்றால் , அது இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உண்டு. முதலில் நாம் நல்லிணக்கத்தை உருவாக்கிய பின்னர் தான் ஏனைய பயணங்களைத் தொடர முடியும் எனவும் குறிப்பிட்டார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.