இலங்கை

இலங்கையில் முன்னர் இடம்பெற்ற முக்கிய படுகொலைகளான மகேஸ்வரன், லசந்த விக்ரமதுங்க மற்றும் தாஜூடின் ஆகியர்களது கொலை தொடர்பில் விசாரணைகளைத் துரிதப் படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிக்கு அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிபர் மைத்திரிபால சிறிசேன பாரபட்சமின்றி இதில் விரைந்து ஈடுபட்டால் நாட்டு மக்கள் மற்றுமொரு தடவை அவரை ஜனாதிபதி ஆக்குவார்கள் என்றும் ஹெரிசன் கூறியுள்ளார். பொலன்னறுவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தின் போதே இவர் இக்கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதைவிட ஊழல் மோசடிகளுக்கு எதிரான கொள்கையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுதியாக இருப்பதாகவும் இது தொடர்பில் அதிபர் சிறிசேன எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமது கட்சி பூரண ஆதரவை அளிக்கும் என்றும் ஹெரிசன் குறிப்பிட்டுள்ளார். ஹெரிசன் தனது பிரச்சாரத்தின் போது முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரின் தரப்பினர் பாரிய ஊழல்  மோசடியில் ஈடுபட்டதையும் சுட்டிக் காட்டியதும் குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.