இலங்கை

 

இலங்கையில் கைப்பற்றப் பட்ட 1000 கோடி பெறுமதியான 928 Kg கொக்கேயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அழிக்கப் பட்டது.

இது குறித்து ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்தியில் இந்தப் போதைப் பொருள் இன்று திங்கட்கிழமை காலை கட்டுநாயக்க முதலீட்டு அபிவிருத்தி சபை வளாகத்தில் வைத்து அழிக்கப் பட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தளவு பெருந்தொகையான போதைப் பொருள் இவ்வாறு பகிரங்கமாக அழிக்கப் படுவது இதுவே முதன்முறையாகும்.

2016 டிசம்பர் 8 ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த கப்பல் ஒன்றில் சட்ட விரோதமாக வந்த இந்தப் போதைப் பொருள் இலங்கைப் போலிஸ் பிரிவின் போதைப் பொருள் அழிப்புக் குழுவினரால் கைப்பற்றப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.