இலங்கை

தமது நல்லாட்சி அரசின் செயற்பாட்டாலும், வேலைத் திட்டங்களாலும் 3 வருடங்களில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி வளர்ச்சி வீதம் 5.5% வீதத்தால் அதிகரித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் தெரிவித்துள்ளார். 

இவரது அறிக்கையில் மேலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதாவது 2015 இல் 1454.9 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்ட அரச வருமானம் 2016 இல் 1686.1 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளோம். இது 15.9% வீத அதிகரிப்பாகும். மேலும் வரி வருமானமும் அதிகரிக்கப் பட்டுள்ளதுடன் மத்திய வங்கி அறிக்கையின் படியிலான அரச வருமானமும் அதிகரிக்கப் பட்டுள்ளது.

மேலும் அதிக இலாபம் சம்பாதித்த எந்தவொரு அரச நிறுவனமும் தனியார் மயமாக்கப் படவில்லை.

3 வருடங்களுக்கு முன்பு குறைக்கப் பட்ட பெட்ரோல் விலை இன்னமும் அதிகரிக்கப் படவில்லை. நாட்டின் கடன் சுமையின் மத்தியிலும் அரச நலன்புரி சேவைகளில் குறைவு ஏற்படுத்தப் படவில்லை. எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் கூட உறுதிப் படுத்தியுள்ளன. இவ்வாறு அமைச்சர் அகில விராஜ் குறிப்பிட்டார்.

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.