இலங்கை

இலங்கை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன கட்டுநாயக்கவில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தேசிய அரசியல் நோக்கம் அற்ற குடும்ப அரசாங்கம் ஒன்றை தாபிக்கும் கட்சியை ஆட்சிக்கு இந்நாட்டு மக்கள் இனியொரு முறை இடமளிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகள், மற்றும் குடும்ப ஆட்சி போன்ற காரணங்களினால் தான் 2015 ஜனவரி மாதம் 8 ஆம் திகதி தேர்தலில் ராஜபக்ஸ அரசை மக்கள் நிராகரித்ததாகவும் மீண்டும் ஒரு முறை அவர்கள் குடும்ப ஆட்சியையோ அல்லது ஏகாதிபத்தியத்தையோ ஏற்படுத்த முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும் சமீபத்தில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்துத் தெரிவிக்கையில் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதா என்பது குறித்துத் தான் இன்னமும் முடிவு எடுக்கவிலை என்றும் எனினும் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இப்போதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் இதுவரை இலங்கை அரசியலில் எதிர்க் கட்சித் தலைவராகவோ அல்லது பிரதமராகவோ பதவி வகிக்காத ஒரு நபராக நான் ஜனாதிபதியாகத் தேர்வானதாகவும் இது அன்றைய சூழலில் நாடு இருந்த நிலையில் எதிர்பாராது இடம்பெற்ற ஒரு நிகழ்வு என்றும் தெரிவித்தார். மேலும் இது போன்றே இலங்கை அரசியலில் ஏதேனும் ஒரு வகையில் தான் தொடர்ந்து நீடிப்பேன் என்பது உறுதி எனவும் மைத்திரி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.