இலங்கை

“புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் சமஷ்டி என்ற சொல் பாவிக்கப்படாவிட்டாலும், சமஷ்டி முறையிலான ஆட்சி முறை இருக்கவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

வவுனியாவில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இரா.சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “முஸ்லிம் மக்களுடன் பேசி இணக்கப்பாட்டுக்கு வந்து பிரச்சினைகளை தீர்க்கவேண்டிய கடமைப் பாடு எமக்குள்ளது. அதில் நாம் எல்லோரும் பங்கெடுக்கவேண்டும். எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். தந்தை செல்வாவின் கருத்துக்கள் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சார்பாகவே இருந்தது. அதை முஸ்லிம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

செல்வா- பண்டா ஒப்பந்தமாக இருந்தாலும் சரி, டட்லி- செல்வா ஒப்பந்தமாக இருந்தாலும் சரி வடக்கு- கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்றே உள்ளது. ஆகவே, வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒத்துழைத்து ஒருவரின் உரிமையை ஒருவர் மதித்து நல்லதொரு முடிவுக்கு வரவேண்டும்.

இடைக்கால அறிக்கையில், இணைப்பு இடம்பெறலாம் அல்லது இடம்பெறாமல் இருக்கலாம். இணைப்பு நடைபெறுவதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெற வேண்டும் என்ற மூன்று விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சமஷ்டி என்ற சொல் பாவிக்கப்படவில்லை. ஆனால் அது சமஸ்டி முறையிலான ஆட்சி முறையாக இருக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். சமஷ்டிக்கு பொருத்தமான பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக மத்தியிலும் மாகாணத்திலும் அந்தந்த பகுதியில் வாழும் மக்களின் இறைமையின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். எனவே அதில் மாற்றங்கள் செய்யப் படவேண்டும். அது தொடர்பில் நாம் கவனமாகவும் பொறுப்புடனும் செயற்பட்டு வருகின்றோம்.

இந்நிலையில், இதை தூக்கி எறிந்து விட்டு இதில் எதுவும் இல்லை என்று சொல்லும் நிலை தற்போது இல்லை. இதை தொடர்ந்து எமக்கு ஏற்புடையதாக மக்களுக்கு ஏற்புடையதாக மாற்றவேண்டியது எமது பொறுப்பு. ஆகவே அந்த பொறுப்பை நிறைவேற்றாமல் கவனயீனமாக இருக்கமுடியாது.” என்றுள்ளார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பனிப்போரில் இலங்கை சிக்கிக் கொள்ளாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 10,000ஐ நெருங்கியுள்ளது. 

பிரான்சில் நடந்த ஆசிரியர் கொலை சம்பவத்திற்கு இந்தியா வன்மையாக கண்டிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தமிழகத்தின் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 2 , 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் அதி தீவிர தொற்றுதலைத் தடுக்கும் கட்டுப்பாட்டினை சுவிஸ் இழந்து விட்டது என எழுந்துள்ள விமர்சனங்களை, சுவிஸின் சுகாதார மற்றும் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் இன்று செய்தி ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் நிராகரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்று புதிய பாதுகாப்பு விதிகளை நாடாளவிய மட்டத்தில், கடந்த புதன் கிழமை மத்திய அரசு கடுமையாக்கியிருந்தது.