இலங்கை

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை முன்வைத்து எதிர்வரும் 06ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார். 

அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 06ஆம் திகதி காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் ஆரம்பமாகும் என்று பாராளுமன்ற பிரதி செயலாளர் கூறியுள்ளார்.

பிணைமுறி மோசடி சம்பந்தமான அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடி சம்பந்தமான அறிக்கைகள் தொடர்பில் இதன்போது விவாதம் நடத்தப்பட உள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு முன்பாக, குறித்த அறிக்கைகள் மீது பாராளுமன்ற விவாதம் நடத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்தது.

இந்நிலையில், எதிர்வரும் 06ஆம் திகதி பாரளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் கூறியுள்ளார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

புரேவி புயல் அனர்த்த நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி; தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.