இலங்கை

“கூட்டு அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து விலகி எந்தவொரு பிரதான கட்சி ஆட்சியமைக்க வேண்டும் எனினும், எமது ஆதரவு வேண்டும்” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பலாங்கொடை இம்புல்பே பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இரண்டு கட்சிகளுக்கிடையில் தனி அரசாங்கம் அமைத்தக்கொள்ள போவதாக இரு கட்சி தலைவர்களிடத்தில் பேச்சுகள் இடம்பெறுகிறது. ஆனால் இந்த இரு கட்சி தலைவர்களும் தனியாக அரசாங்கத்தை அமைக்க வேண்டுமானால், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் 6 உறுப்பினர்களுடைய ஆதரவு கண்டிப்பாக தேவைப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை தனியான ஆட்சியை நடத்த இருக்கின்ற 96 உறுப்பினர்களுடன் மேலும் பல உறுப்பினர்கள் வேண்டும், என்பதால் நாம் அவர்களுக்கும் அவசியமாவோம். பிரதமர் தனி ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் எமது உறுப்பினர்களின் உதவி தேவைப்படும். இவ்வாறான நிலையில் நாம் சக்தியுடையவர்களாக இருக்கின்றோம். அத்தோடு தமிழ் முற்போக்கு கூட்டணியை எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் வெற்றியடைய செய்து மேலும் எமது சக்தியை உணரப்படுத்தவோம்.“ என்றுள்ளார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.