இலங்கை

சந்தர்ப்பவாத ஊழல் அரசியல்வாதிகளை விரட்டியடிக்கும் போராட்டத்திற்காக எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

“சிலரைப்போன்று ஜனாதிபதி பதவியில் என்றுமே நிலைத்திருப்பதற்காக நான் அரசியலமைப்பை மாற்றப்போவதில்லை. அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மேற்கொண்டதைத் தொடர்ந்து இன்று இந்த நாட்டை ஆட்சிசெய்வது அரசர் ஒருவரோ, ஜனாதிபதி ஒருவரோ அன்றி மக்களேயாகும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றில் இந்த நாட்டை ஆட்சி செய்த எந்தவொரு அரசரோ அல்லது ஜனாதிபதியோ மேற்கொள்ளாத வகையில் நாட்டின் ஒரு பகுதியை வெளிநாடொன்றுக்கு உரிமை எழுதி வழங்க திட்டமிட்டவர்களே, நாட்டை துண்டாடுவதாகவும் நாட்டை விற்பனை செய்வதாகவும் இன்றைக்கு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது கவலைக்குரியதாகும் என்று அவர் கூறியுள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத்திற்கு 240 ஏக்கர் காணியுரிமையை சீனாவுக்கு வழங்க திட்டமிட்டமை பற்றியும், கொழும்பு இராணுவத் தலைமையகம் அமைந்துள்ள 6 ஏக்கர் காணியை சங்ரில்லா ஹோட்டல் குழுமத்திற்கு வழங்கியமையும் அவர்களுக்கு மறந்துபோய்விட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

மாத்தளையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.