இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவியிலிருந்து நீக்குமாறு ‘திலக் மாரப்பன குழு’, ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு பரிந்துரைத்துள்ளது. 

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக் குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள காரணங்களை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி, திலக் மாரப்பன குழுவை நியமித்தது.

குறித்த குழுவில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில், தொழிற்சங்க வாதிகள், சட்டத்தரணிகள், நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் இதில் அங்கம் வகித்தனர். குறித்த குழுவின் அறிக்கையானது, கடந்த வாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.