இலங்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் தல இரண்டு கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தொடர்ந்தும் கூறி வருகின்ற நிலையில், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

‘நிரந்தர தீர்வு நோக்கிய பயணத்தில் உள்ளூராட்சித் தேர்தல்களின் வகிபாகம்’ எனும் தொனிப் பொருளிலான மக்கள் சந்திப்பும் கருத்தாடல் நிகழ்வும் நேற்று புதன்கிழமை யாழ். நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “நடேசு சிவசக்திக்கு (சிவசக்தி ஆனந்தன்)) வவுனியாவிலிருந்து உளவு வேலை செய்வதற்காக விடுதி ஒன்று வழங்கப்பட்டது. அதையே தனது கட்சி அலுவலகமாக சில நாட்களுக்கு முன்பு வரைக்கும் பாவித்துக் கொண்டிருந்தார். தேர்தல் ஆணைக்குழு அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டுமென்று கூறிய பின்னரே அதனை அரசாங்கத்திடம் ஒப்படைத்தார்.

இதற்கு முன்னர் வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர். 2010ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் வரவு – செலவுத் திட்டத்திற்கு வாக்களித்தவர். தற்போது, மக்களின் அபிவிருத்திக்கு கருத்துக்களைக் கேட்பதை தவறென்று சொல்கின்றார்.

கடந்த அரசு காலத்தில் இங்குள்ள ஒரு அமைச்சரின் கருத்துக்களின் படி அபிவிருத்தி நடந்தது. எமக்கு ஒதுக்கப்படும் நிதியின் ஒரு துளி கூட இங்கு செலவிட்ட பணத்தின் அளவுக்கு இல்லை. அவர் தான் அந்த அபிவிருத்திகளைச் செய்தார்.

இப்போது வடக்கிலும் கிழக்கிலும் சரி, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், பிரதானமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே தெரிவு செய்துள்ளனர்.

2 கோடி ரூபாவை இலஞ்சம் எனச் சொல்கின்றார்கள். ஊடகங்கள் வேண்டுமென்றே செய்யும் பொய் பிரசாரத்தில் இது அரசியல் இலஞ்சம் தானேயென ஆசிரியர் தலையங்கம் எழுதுபவர்கள் இருக்கும் வரைக்கும், நாங்கள் இதைச் சொல்ல வேண்டியிருக்கின்றது.

2 கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இந்த விடயம் எல்லை மீறிப் போயுள்ளது. இனியும் பொறுக்க முடியாது. சிவசக்தி ஆனந்தனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இன்று அல்லது நாளை இந்த சட்ட நடவடிக்கைக்குரிய ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.” என்றுள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.