இலங்கை

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க டுபாய் பொலிஸாரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

அவர் டுபாய் ஊடாக அமெரிக்க செல்ல முற்பட்டப் போதே டுபாய் விமானநிலையத்தில் வைத்து, டுபாய் பாதுகாப்பு தரப்பினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக உதயங்க வீரதுங்கவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை , அவர் ரஷ்யாவுக்கான தூதுவராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் மிக் விமான கொள்வனவு மோடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை இலங்கை நாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். 

எமது கொள்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டால், எதிர்வரும் காலங்களில் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிகிச்சை மையமாக இருந்த ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் நைட்ரஜன் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வடைந்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் கோடைவிடுமுறை முடிந்து பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு ஆரம்பமாகவுள்ளன. சுவிஸின் சில மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் தொடங்குகின்றன.