இலங்கை
Typography

இறுதி மோதல்களின் போது காணாமற்போன எனது மகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நிற்கும் படமொன்று வெளியானது. அந்தப் படத்தினை காட்டி எனது மகளை மீட்டுத் தருமாறு கோரினேன். ஆனாலும், அது இன்னமும் பலிக்கவில்லை என்று தாயார் மு.ஜெயவனிதா தெரிவித்துள்ளார். 

“ஜனாதிபதியோடு புகைப்படத்தில் இருந்த எனது மகளை எனக்கு இதுவரை காட்டாதவர்கள் எப்படி நீதியை பெற்றுத்தரப்போகிறார்கள். எமக்கு இந்த அரசாங்கத்திலும் நம்பிக்கை இல்லை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பிலான கருத்தறியயும் செயலணியிடமே மு.ஜெயவனிதா இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, “எனது மகள் இறுதி மோதல்களின் போது காணாமற் போயிருந்தார். நான் அவளை தேடி வந்த நிலையில் கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அருகில் நிற்பதை துண்டு பிரசுரம் ஒன்றில் கண்டேன். இது தொடர்பில் நான் பலரிடமும் முறையிட்டேன். இறுதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூட நேரடியாக தெரிவித்தேன். ஆனால், பல மாதங்கள் கடந்தும் அதற்கு பதில் இல்லை. ஜனாதிபதியுடன் நிற்கும் புகைப்படத்தையும் அதிகாரிகளிடம் நான் கையளித்தேன். ஜனாதிபதி நினைத்தால் 15 நிமிடத்திற்குள் எனது மகளை கண்டு பிடிக்க முடியும். ஆனால் இதுவரை பதில் இல்லை. ஜனாதிபதியுடன் எனது மகள் நிற்கும் புகைப்படத்தை கொடுத்த எனக்கு தீர்வு கிடைத்தால் தான் ஏனையவர்களுக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும்.” என்றுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS