இலங்கை
Typography

நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு கல்வியாளர்களும், புத்திஜீவிகளும் தமது மௌனம் கலைத்து முன்வர வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பழைய மாணவர்கள் சங்கத்தின் விழாவொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மானிட சமூகத்தின் முன்னேற்றத்திற்காக இன்று முக்கிய தடையாக போலியான மனிதர்களின் கோசங்களும் கல்வியாளர்களும் மற்றும் புத்திஜீவிகளின் மௌனமும் விளங்குவதாக அமெரிக்க மனிதநேய தலைவர் ஒருவரான மாட்டின் லூத்தர் கிங் வெளியிட்ட கூற்றினை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, இது அன்றிலும் பார்க்க இன்று எமது நாட்டுக்கு மிகப் பொருத்தமாக உள்ளதெனக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்குத் தேவையான கல்வியாளர்கள் மற்றும் புத்திஜீவிகளை உருவாக்குவதற்காக பல்கலைக்கழகங்களில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் அனைத்து கல்வியாளர்கள் மற்றும் புத்திஜீவிகளின் பங்களிப்பினை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இதற்காக அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று நாடு என்ற ரீதியில் எம்மால் தீர்த்துவைக்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகளுள் மனிதவள பற்றாக்குறை பாரியதொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS