இலங்கை
Typography

‘தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் வரையில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் திட்டவிட்டமாக அறிவித்துள்ளார். 

நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகவுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இவ்வாறான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணையுமா இல்லையா என்கிற கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

எனினும், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முற்போக்கான முறையில் நடவடிக்கை எடுக்கும் அரச தரப்பிற்கு எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு தாம் ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Most Read