இலங்கை

“இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் தொடர்ந்து பிரதமராக நான் இருக்கின்றேன். கட்சியின் எதிர்கால தலைமைத்துவத்தை கருத்தில்கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவேன்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நிறைவடைந்ததன் பின்னர் அலரிமாளிகையில் முதன்முதலாக ஊடகவியலாளர்களை இன்று வெள்ளிக்கிழமை மாலை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அதன் காரணமாக அதிகரிக்கப்பட்ட பொருட்களின் விலை என்பன, இந்தத் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கம் செலுத்தியிருந்தது. அதுமாத்திரமன்றி, 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் சிலதை நிறைவேற்றியிருக்கிறோம், பலது நிறைவேற்றப்படவில்லை. அதுவும் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகையால், மக்கள் எங்களுக்கு வழங்கிய எச்சரிக்கையை மனதார ஏற்றுக்கொள்கிறோம்.

யார் என்ன சொன்னாலும், இந்த அரசாங்கத்தை நாங்கள் தொடர்ந்து கொண்டுசெல்வோம். வரும் வாரத்தில் பாராளுமன்றம் கூடவுள்ளது. பலத்தை நிரூபிக்க விரும்புபவர்கள் பாராளுமன்றில் பார்த்துக்கொள்ளட்டும். அரசியலமைப்பின் பிரகாரம், என்னுடைய பதவியைத் துறக்கவேண்டிய அவசியமில்லை. அதனை எவரும் வலியுறுத்தவும் முடியாது. நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, மக்கள் சேவை வழங்கவேண்டியது எங்கள் பொறுப்பு. அந்தப் பொறுப்பை நாங்கள் செய்வோம்” என்றுள்ளார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.