இலங்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியையும் இணைந்து ஆட்சி நடத்த வேண்டும் என்பதையே நாட்டு மக்கள் விரும்புகின்றனர் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

அதேநேரம், ஆட்சியமைக்கும் இக்கூட்டணி சிறிலங்கா பொதுஜன பெரமுனயை எதிர்க்கட்சியாகவும் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, “உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறுகள் நடைமுறையிலுள்ள அரசாங்கம் மீதான நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளது. இதனால் தற்போதைய அரசில் பாரிய மாற்றம் முன்னெடுக்கப்பட வேண்டியது கட்டாயம். எதிர்வரும் 18 மாதங்களுக்குள் அரசாங்கம் உரிய முறையில் இதனை அணுக வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் கொள்கைகளில் மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும். நாட்டை மேலும் பலம் பொருந்தியதாக்குவதற்கு திறமையும் நுட்பமும் நிறைந்த இளைஞர்களுக்கு கட்சியில் வாய்ப்பளிக்க வேண்டும். அதேநேரம் நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைப்பதற்காகவும் கட்சி பாடுபட வேண்டும்.இல்லையேல் ஐக்கிய தேசியக் கட்சி இவ்வருடம் செப்டம்பரிலும் அடுத்த வருடம் ஏப்ரலிலும் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலிலும் தோல்வியை சந்திக்க நேரிடும். அதனைத் தொடர்ந்து 2020இல் ஆட்சியைக் கைப்பற்றுவதென்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெறும் கனவாகவே இருக்கும்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன அதிக வாக்குகளைப் பெற்றிருந்தாலும் உண்மையில் அது சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குரிய வெற்றியாகவே ஜாதிக்க ஹெலஉறுமய கருதுகின்றது. எவ்வாறாயினும் தற்போது மக்களின் ஆணையை ஏற்று ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அமைப்புக்கும் இடையில் கூட்டணியொன்றை அமைப்பதுவே இதற்குரிய சிறந்த தீர்வாக அமையும்.” என்றுள்ளார்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.