இலங்கை

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் பிரகாரம், பிரதமரை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்வது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டு எதிரணியிடம் (மஹிந்த அணி) நேற்று வெள்ளிக்கிழமை உறுதியளித்திருந்தார்.

இதுதொடர்பில், ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் என்ற அமைப்பின் சார்பில், அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில், “பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு முன்னர் இருந்தது. ஆனால், 19வது திருத்தச்சட்டத்தின் மூலம், அந்த அதிகாரம் தற்போது நீக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதன் மூலமே பிரதமரைப் பதவி நீக்கம் செய்ய முடியும்.” என்றுள்ளது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.