இலங்கை

நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்துள்ளது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அடுத்து, நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், அதற்கு உடன்பாட ரணில் விக்ரமசிங்க, தன்னை பதவி விலகுமாறு கோருவதற்கு எந்தவித காரணங்களும் இல்லை என்றும், விரும்பினால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து ஏனையை தரப்பினர் தன்னை பதவி விலக்கிக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்த நல்லாட்சி அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிக்க முடியாது என்று சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இந்த அறிவித்தலை, சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரான திலங்க சுமதிபால வெளியிட்டுள்ளார்.

அத்தோடு, ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.