இலங்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஜனாதிபதி இல்லத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. 

இதன்போது, நல்லாட்சி அரசாங்கத்துக்குள் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டன. குறிப்பாக, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என்கிற கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வலுயுறுத்தியுள்ளதாக தெரிகின்றது. இதற்கு, ரணில் விக்ரமசிங்க இணங்காத நிலையில், பேச்சுவார்த்தை எந்தவித முடிவும் இன்றி நிறைவுக்கு வந்திருக்கின்றது.

இதனிடையே, பாராளுமன்றம் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கூடவுள்ளது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.