இலங்கை

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்றுடன் (பெப்ரவரி 20, செவ்வாய்க்கிழமை) ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்கின்றது. 

இதனை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய போராட்டத்தின்போது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, த.குருகுலராஜா மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மத தலைவர்கள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (20) ஒரு வருடம் கடந்த நிலையில் 366 ஆவது நாளாகவும் தொடர்கிறது. அரசாங்கம் தமக்கு எந்த தீர்வையும் தராது என் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச விசாரணையே தமக்கான தீர்வாக அமையும் என போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வெளியாகியுள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு இல்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3வது வாரம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு, நேரடி வகுப்புகளாக இல்லாமல், இணையவழிக் கல்வி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை என்பது, உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது எல்.ஓ.சி என்று அழைக்கப்படுகிறது, அதாவது இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த 1962 போருக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்விருநாடுகளும் அமைத்துக்கொண்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அது.

ஐ.நா சபைக்கான அமெரிக்கத் தூதராக மூத்த தூதரக அதிகாரியும், கருப்பினத்தைச் சேர்ந்தவருமான 68 வயதாகும் லிண்டா தோமஸ் கிரீன்பீல்டு என்பவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடென் நியமித்துள்ளார்.

கடந்த சில தசாப்தங்களில் இல்லாதவாறு இஸ்ரேல் அரசானது ஒரு பாரிய இரகசிய அணுவாயுத செயற்திட்டத்தை முன்னெடுத்து வருவதாக AP ஊடகம் செய்மதிப் புகைப் படங்களது ஆதாரத்தை சுட்டிக் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.