இலங்கை

உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் 25 வீத பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

25 வீத பிரதிநிதித்துவத்தை நிரப்ப முடியாத மன்றங்கள் தொடர்பில் மாத்திரம் தேவையான திருத்தங்கள் செய்யவே கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

25 வீத பெண்களின் பிரதிநிதித்துவத்தை மாற்ற இணக்கம் காணப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் போதே லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமது சுயநல அரசியலிற்காக எமது அமைப்பின் பெயரை பயன்படுத்தி போராட்டம் செய்து, மூக்குடைபட்டு வருகின்றது.” என்று வடக்கு- கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளார். 

தமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைத்துச் செயற்படும். எனினும், அந்த ஒற்றுமை முயற்சிகள் தேர்தல் கூட்டாகவோ அல்லது அந்தக் கூட்டிற்கு ஒரு பெயர் சூட்டவோ கூடாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ். அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை. தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, தன்னுடைய குறைபாடுகளுள் ஒன்று என பாரதப் பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.

தமிழகத்தில் அன்மித்த நாட்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக அறியப்படுகிறது. கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;

மியான்மாரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக நாளுக்கு நாள் ஆர்ப்பாட்டங்கள் வலுத்து வரும் நிலையில் யங்கூனில் பல்லாயிரக் கணக்கில் ஒன்று கூடிய பொது மக்கள் கலைந்து செல்ல போலிசார் ரப்பர் தோட்டாக்களை பிரயோகித்துள்ளனர்.

நைஜீரியாவின் நைகர் மாகாணத்தில் இருந்து கடந்த வாரம் கடத்தப் பட்ட பள்ளி மாணவர்களில் 27 பருவ வயது மாணவர்களை சனிக்கிழமை நைஜீரியப் படையினர் மீட்டுள்ளனர்.